டெல்லியில் இன்று 46-வது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்

டிசம்பர் மாதத்துக்கு 7.35 டி.எம்.சி. தண்ணீரை தமிழக அதிகாரிகள் கேட்டனர்.;

Update:2026-01-06 05:41 IST

புதுடெல்லி,

தமிழ்நாடு, கர்நாடகம் இடையேயான காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்னையை கண்காணிப்பதற்காக காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி முறைப்படுத்தும் குழுவை அமைத்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2018-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இந்த இரண்டு அமைப்புகளும் அவ்வப்போது கூடி பல்வேறு முடிவுகளை எடுத்து வருகின்றன.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 46-வது கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டிசம்பர் மாதத்துக்கு 7.35 டி.எம்.சி. தண்ணீரை தமிழக அதிகாரிகள் கேட்டனர். மேலும் அங்கீகரிக்கப்படாத நீரேற்று திட்டங்களை கர்நாடகம் தங்களது பாசனத்துக்காக செயல்படுத்தக்கூடாது என்றும் வற்புறுத்தினர்.

இந்த நிலையில் ஆணையத்தின் 47-வது கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு டெல்லியில் உள்ள மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் நடக்கிறது. இதில் பங்கேற்க தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்