சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு; போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ஜாமீன்

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்து வரும் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.;

Update:2026-01-06 06:20 IST

புதுடெல்லி,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேர் போலீசாரின் கொடூர தாக்குதலில் உயிரிழந்தனர்.தமிழகத்தை உலுக்கிய இந்த சம்பவம் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 22-ந்தேதி அரங்கேறியது.இந்த சம்பவத்தில் அப்போதைய சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கொலை வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில், சி.பி.ஐ. விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டது. 105 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்ட சி.பி.ஐ., துரிதமாக செயல்பட்டு 3 மாதத்துக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.இந்த வழக்கின் விசாரணை மதுரை சி.பி.ஐ. கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.இந்த வழக்கில் முதல் நபராக குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மருத்துவ சிகிச்சையை சுட்டிக்காட்டி ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.வி.நாகரத்தினா, உஜ்ஜல் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மருத்துவ சிகிச்சைக்காக ஸ்ரீதருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்