டெல்லியில் தொடரும் காற்று மாசு; காற்றின் தரம் 281 ஆக பதிவு

டெல்லியில் தொடரும் காற்று மாசால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.;

Update:2026-01-06 08:33 IST

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில், மாசு அதிகரிப்பதன் காரணமாக காற்று மாசு அடைந்து வருகிறது. குளிர் காலம் என வந்துவிட்டாலே தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துவிடும். இந்தாண்டும் கூட அதே நிலைமை தான். கடந்த சில வாரங்களாகவே டெல்லியில் காற்று மாசு உச்சத்திற்குப் போய்விட்டது. இதனால் அங்குப் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.தேசிய தலைநகரில் குளிர் நிலை தொடர்ந்திருப்பதால், ஜனவரி 2 முதல் 5 வரையில் டெல்லியில் குளிர் அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD)தெரிவித்தது.

இந்தநிலையில், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) கூற்றுப்படி, தலைநகர் டெல்லி ஐ.டி.ஓ பகுதியில் காற்றின் தரம் 281 ஆக பதிவாகி உள்ளது. அடுத்த ஆறு நாட்களுக்கும் காற்றின் நிலைமை மோசமான பிரிவில் தான் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்