இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் பிரதமர் மோடி பேச்சு

இந்தியா-இஸ்ரேல் நட்புறவை இன்னும் வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டோம் என பிரதமர் மோடி கூறினார்.;

Update:2026-01-07 15:51 IST

கோப்புப்படம்

புதுடெல்லி,

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பிரதமர் மோடி இன்று பேசினார். இதுபற்றி அவர் வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில், என்னுடைய நண்பர் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேசியதில் மகிழ்ச்சி. அவருக்கும் மற்றும் இஸ்ரேல் மக்களுக்கும் ஆங்கில புதுவருட வாழ்த்துகளை தெரிவித்து கொண்டேன்.

வரும் ஆண்டில், இந்தியா-இஸ்ரேல் நட்புறவை இன்னும் வலுப்படுத்துவது தொடர்பாக நாங்கள் இருவரும் ஆலோசனை மேற்கொண்டோம். பிராந்திய சூழல் பற்றிய பார்வைகளை இருவரும் பரிமாறி கொண்டோம் என்றும் தெரிவித்து உள்ளார்.

பயங்கரவாதத்திற்கு எதிராக சிறந்த உறுதியுடன் போராடுவது என்ற பகிரப்பட்ட தீர்மானத்தை இருவரும் மீண்டும் உறுதிப்படுத்தி கொண்டோம் என தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்