பிரிக்ஸ் அமைப்பு உச்சி மாநாடு சின்னம் வெளியீடு

இந்த நேரத்தில் இந்தியா தலைமை ஏற்பது பிரிக்ஸ் அமைப்பின் பயணத்தில் ஒரு முக்கிய தருணமாகும்.;

Update:2026-01-13 19:37 IST

புதுடெல்லி,

இந்தியா, ரஷியா, சீனா, பிரேசில், தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பின் 18-வது உச்சி மாநாடு இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கிறது. இதனையடுத்து 2026-ம் ஆண்டு பிரிக்ஸ் அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்குகிறது. இந்த நிலையில் இந்தியாவின் 2026-ம் ஆண்டுக்கான பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளம் மற்றும் சின்னம், கருப்பொருள் வெளியீட்டு விழா டெல்லியில் நடந்தது.

இதில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் கலந்து கொண்டு பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம், சின்னம், கருப்பொருள் ஆகியவற்றை வெளியிட்டார்.

விழாவில் எஸ்.ஜெய்சங்கர் பேசியதாவது:-

இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவம், அதிக உலகளாவிய நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் ஆற்றலை ஒன்றிணைக்க முயற்சிக்கும். இந்த நேரத்தில் இந்தியா தலைமை ஏற்பது பிரிக்ஸ் அமைப்பின் பயணத்தில் ஒரு முக்கிய தருணமாகும். பிரதமர் மோடியின் வழிகாட்டுதல்படி மனிதநேயத்திற்கும் முதலிடம் மற்றும் மக்கள் அணுகுமுறையுடன் இந்தியா தனது தலைமைப்பொறுப்பை அணுகிறது. எங்கள் தலைமைத்துவத்தின் கருப்பொருள்,மீள்தன்மை, புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றூம் நிலைத்தன்மைக்காக கட்டியெழுப்புதல் என்பதாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்