4 குடிசை வீடுகளை தீக்கிரையாக்கிய காகம்; கடன் வாங்கி வைத்திருந்த ரூ.1 லட்சமும் நாசம்

சிறிது நேரத்தில் மளமளவென எரிந்து அருகில் உள்ள மேலும் 3 பேரின் குடிசை வீடுகளுக்கும் பரவியது.;

Update:2025-11-16 11:08 IST

நகரி

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கோநூரில் வசிக்கும் பெண் தனது வீட்டின் முற்றத்தில் உள்ள துளசி மாடத்தில் விளக்கேற்றி வைத்து வழிபாடு நடத்தினார். இந்தநிலையில், எரிந்து கொண்டிருந்த விளக்கை அங்கிருந்த ஒரு காகம் தூக்கிச் சென்று அங்குள்ள ஓலை குடிசை வீட்டின் மீது போட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் புகைந்து கொண்டிருந்த விளக்கு திரியில் இருந்து குடிசை தீப்பற்றி பயங்கரமாக எரிந்தது.

சிறிது நேரத்தில் மளமளவென எரிந்து அருகில் உள்ள மேலும் 3 பேரின் குடிசை வீடுகளுக்கும் பரவியது. இதனால் அந்த வீடுகளில் இருந்தவர்களும் பதறி அடித்துக் கொண்டு வெளியே ஓட்டம் பிடித்தனர். தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த சம்பவத்தில் 4 குடிசை வீடுகளும் எரிந்து நாசமாகின. இந்த தீ விபத்தில் வீட்டை இழந்த நம்பூரி கோபி என்பவர் விவசாய கடனாக ரூ.1 லட்சம் வாங்கி வீட்டில் வைத்திருந்தார். அந்த பணத்துடன் வீட்டில் இருந்த அரை பவுன் நகையும் எரிந்து நாசமானது.

Tags:    

மேலும் செய்திகள்