ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு - ரிசர்வ் வங்கி

வீடு, கார் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.;

Update:2025-12-05 11:09 IST

டெல்லி

நாட்டின் பல்வேறு வங்கிகளுக்கு மத்திய ரிசர்வ் வங்கி குறுகிய கால கடன்கள் அளிக்கிறது. அந்த கடன்களுக்கு பிற வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு வட்டி செலுத்துகின்றன. இந்த வட்டி விகிதம் ரெப்போ என்று அழைக்கப்படுகிறது. இதனிடையே, நாட்டின் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி அவ்வப்போது மாற்றியமைப்பது வழக்கம்.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் நிதி நிலை கொள்கை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தில் 0.25 சதவீதம் குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் 5.50 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் வீடு, கார் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்