ரெயிலில் நூதன முறையில் கஞ்சா கடத்தல்: இளம்பெண் கைது

ஓடும் ரெயிலில் இருந்து பயணி ஒருவர் 4 பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை ஜன்னல் வழியாக வெளியே வீசி உள்ளார்;

Update:2025-12-09 02:30 IST

திருச்சூர்,

கேரள மாநிலம் திருச்சூர் ரெயில் நிலையத்தில் இருந்து எர்ணாகுளம் நோக்கி ஒரு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே நெடுவன்னூர் பகுதியில் சென்ற போது, பயணி ஒருவர் 4 பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை ஜன்னல் வழியாக வெளியே வீசி உள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த சிலர், ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நெடும்பாசேரி போலீசார் அங்கு சென்ற போது, ரெயிலில் இருந்து வீசிய அந்த பாக்கெட்டுகளை இளம்பெண் ஒருவர் எடுத்து சென்றார்.

அவரை பிடித்து சோதனை செய்த போது, பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் 8 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தஷாலினி (வயது 24) என்பதும், ரெயில் நிலையங்களில் போலீசார், கலால் துறையினர் சோதனை மேற்கொள்வதால் கஞ்சா கடத்தல்காரர்கள் நூதன முறையில் கடத்தியதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்