மைனர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான நபர் சிறையில் உயிரிழப்பு

தூக்கில் தொடங்கிய நிலையில் கைதியின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.;

Update:2025-04-13 18:57 IST

மும்பை,

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்த விஷால் காவ்லி(35) என்ற நபர், மைனர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டு தஜோலா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று அதிகாலை 3.30 மணியளவில் சிறை வளாகத்தில் உள்ள கழிவறையில் விஷால் காவ்லியின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சிறை அதிகாரிகள் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக உள்ளூர் கார்கர் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்