பல நோய்களுக்கு செயற்கை உரமே காரணம்: உள்துறை அமைச்சர் அமித்ஷா

இயற்கை வேளாண்மை விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதோடு, தண்ணீர் பயன்பாட்டையும் குறைக்கும் என்று அமித்ஷா கூறினார்.;

Update:2025-12-25 23:19 IST

 போபால்,

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா நகரில் நடைபெற்ற இயற்கை வேளாண்மை மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: இன்றைய காலத்தில் பல்வேறு நோய்களுக்கு அடிப்படை காரணமாக ரசாயன உரங்கள் உள்ளன. இதற்கு மாற்றாக இயற்கை விவசாயத்தை மேற்கொண்டால், விவசாயிகளின் வருமானம் குறையாது. மாறாக, அவர்கள் உற்பத்தி செய்யும் விளைபொருட்கள் தூய்மையானதாக இருக்கும்.

இயற்கை வேளாண்மை விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதோடு, தண்ணீர் பயன்பாட்டையும் குறைக்கும். மக்களை நோய்களிலிருந்து பாதுகாக்கும். நாடு முழுவதும் தற்போது 40 லட்சம் விவசாயிகள் இயற்கை வேளாண்மைக்கு மாறியுள்ளனர். என் சொந்த நிலத்திலும் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். உற்பத்தி குறையவில்லை; மாறாக அதிகரித்துள்ளது. இயற்கை விவசாயப் பொருட்களுக்கு உலகளவில் பெரிய சந்தை உள்ளது. இந்திய விவசாயிகள் தயாரிக்கும் பொருட்கள் உலக சந்தையை அடைய தேவையான முழுமையான கட்டமைப்பை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்