எல்.கே.அத்வானி பிறந்தநாள்: பிரதமர் மோடி நேரில் வாழ்த்து

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி.;

Update:2025-11-08 20:27 IST

டெல்லி,

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி. பாஜக கட்சி உருவாக காரணமானவர்களில் எல்.கே.அத்வானியும் முக்கிய பங்காற்றினார். இவர் 2002 முதல் 2004 வரை துணை பிரதமராகவும் செயல்பட்டுள்ளார்.

இதனிடையே, எல்.கே.அத்வானி இன்று தனது 98வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், எல்.கே. அத்வானியின் வீட்டிற்கு இன்று நேரில் சென்ற பிரதமர் மோடி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்