டெல்லி உள்பட வடமாநிலங்களில் கடும் குளிர்: மக்கள் அவதி
டெல்ல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் மூடுபனியுடன் கூடிய குளிர் அலை வீசுகிறது. இதனால், மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.;
புதுடெல்லி,
டெல்லியில் கடும் குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. நேற்று காலை குறைந்தபட்ச வெப்பநிலை 4.2 டிகிரி செல்சியஸாக குறைந்தது. டெல்லியில் நடப்பு குளிர்காலத்தில் பதிவான மிகக் குறைந்த வெப்பநிலை இதுவாகும். டெல்லியிலும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும் மூடுபனியுடன் கூடிய குளிர் அலை வீசுகிறது. இதனால், மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா உட்பட வட மாநிலங்கள் முழுவதும் அடுத்த 3 நாட்களுக்கு கடுமையான குளிர் அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மாநிலங்களிலும் டெல்லியைப் போன்று, மிகக் குளிரான காலைப் பொழுது 4.2 டிகிரி செல்சியஸில் பதிவாகி உள்ளது.
மலைப்பிரதேசங்களான இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தராகண்டிலும் கடுமையான குளிர் நிலவுகிறது. சில இடங்களில் உறைபனியும் காணப்படுகிறது. உறைபனியுடன் கூடிய கடும் குளிர் காரணமாக வட மாநிலங்களின் விமானங்கள் மற்றும் ரயில் சேவைகளில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. வாகன ஓட்டிகள் அதிகாலை வேளைகளில் வாகனங்களில் செல்ல கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள்.