'சமூகத்திற்கு போப் பிரான்சிஸ் செய்த சேவையை உலகம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும்' - பிரதமர் மோடி

போப் பிரான்சிஸ் உடலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேரில் அஞ்சலி செலுத்தினார்.;

Update:2025-04-26 15:57 IST

புதுடெல்லி,

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88), உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21-ந் தேதி வாடிகனில் மரணம் அடைந்தார். அவரது உடல் கடந்த 23-ந் தேதி முதல் வாடிகன் புனித பீட்டர் பேராலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து போப் ஆண்டவரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். மேலும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் ரோம் நகருக்கு சென்று போப் பிரான்சிஸ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

அந்த வகையில் போப் பிரான்சிஸ் உடலுக்கு இந்தியாவின் ஜனாதிபதி திரவுபதி முர்மு நேரில் அஞ்சலி செலுத்தினார். இது குறித்து பிரதமர் மோடி 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்திய மக்கள் சார்பாக போப் பிரான்சிஸ் உடலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மரியாதை செலுத்தினார். சமூகத்திற்கு போப் பிரான்சிஸ் செய்த சேவையை உலகம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்