மரக்காணம் - புதுவை இடையே 4 வழிச்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

2,157 கோடியில் இந்த சாலை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது;

Update:2025-08-08 16:27 IST

புதுடெல்லி,

பிரதமர் மோடி  தலைமையில் டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மரக்காணம் - புதுவை இடையே 4 வழிச்சாலை அமைக்க கேபினட் ஒப்புதல் அளித்துள்ளது. ரூ. 2,157 கோடியில் இந்த சாலை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, புதிய வருமான வரி சட்ட திருத்த மசோதாவை மாற்றங்களுடன் மீண்டும் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட புதிய வருமான வரி மசோதாவை திரும்பப்பெற்றுவிட்டு, திருத்தப்பட்ட புதிய மசோதாவை  தகுந்த நேரத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.   

Tags:    

மேலும் செய்திகள்