புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

புதுவையில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-12 18:13 GMT

மூலக்குளம்

புதுச்சேரி மேட்டுப்பாளையம் அரசு ஐ.டி.ஐ. அருகில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள பெட்டிக்கடையில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த கடையின் உரிமையாளரான அன்னை சோனியாகாந்தி நகரை சேர்ந்த திவ்யரஞ்சன் (வயது 24) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.500 மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதே போல் மேட்டுப்பாளையம் கனகர ஊர்தி முனையம் அருகில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்வதாக சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த கார்த்திக் (36) என்பவரை கோரிமேடு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்