காய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் பலி

காரைக்காலில் காய்ச்சலால் அவதிப்பட்ட 4 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.;

Update:2023-06-17 22:17 IST

கோட்டுச்சேரி

காரைக்காலில் காய்ச்சலால் அவதிப்பட்ட 4 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

4 வயது சிறுவன்

புதுச்சேரி தட்டாஞ்சாவடி சண்முகாபுரத்தைச் சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் (வயது 29), சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் படித்த இவர் சென்னையில் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது ஒரே மகன் ஷியாம் (4) தனியார் பள்ளியில் படித்து வந்தான்.

கோட்டுச்சேரி கீழகாசாகுடி பாலசரஸ்வதி நகரில் வசிக்கும் உறவினர் மாரிச்செல்வி வீட்டுக்கு மகன் ஷியாமுடன் ஸ்டீபன் ராஜ் வந்திருந்தார். ஷியாமுக்கு காய்ச்சல் இருந்ததால், காரைக்காலில் டாக்டரிடம் காட்டினார்.

காய்ச்சலுக்கு பலி

பின்னர் மகனுக்கு மருந்து மாத்திரைகள் வாங்கிக் கொண்டு வீடு திரும்பினார். வீட்டில் இருந்த ஷியாமுக்கு திடீரென வலிப்பு வந்ததால், அவனை கோட்டுச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

பின்னர், மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே சிறுவன் ஷியாம் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து கோட்டுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்