புகையிலை பொருட்கள் விற்ற பெண் கைது

திருநள்ளாறு அருகே புகையிலை பொருட்கள் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-07-28 21:39 IST

திருநள்ளாறு

திருநள்ளாறை அடுத்த செல்லூர் பள்ளித்தெரு பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சம்பந்தப்பட்ட பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். அப்போது புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த ரூ.5 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, கடை உரிமையாளர் அமுதா (வயது 50) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்