காதலன் இறந்த சோகத்தில் இளம்பெண் தற்கொலை

காதலன் இறந்த சோகத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.;

Update:2023-08-22 21:20 IST

ஏனாம்

காதலன் இறந்த சோகத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

காதல்

புதுவை மாநில பிராந்தியமான ஏனாம் யு.கே.வி. நகரை சேர்ந்தவர் சிம்காசலம். இவரது மகள் மிசெல்லா மவுனிகா (வயது 22). பெற்றோரை இழந்த இவர் தனது மாமா கோட்டா திருமூர்த்திலு வீட்டில் தங்கியிருந்து பி.எஸ்சி. நர்சிங் 2-வது ஆண்டு படித்து வந்தார்.

அவர் குருசாம்பேட்டை சேர்ந்த சின்னா என்பவரை காதலித்து வந்தார். கஞ்சா புகைக்கும் பழக்கம் உடைய சின்னா கடந்த வாரம் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை

இதனால் மவுனிகா வேதனையில் இருந்து வந்தாராம். காதலனின் நினைவால் துக்கம் தாங்காத மிசெல்லா மவுனிகா வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து ஏனாம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்