படகு என்ஜின் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டவர் மீது தாக்குதல்

புதுவை நல்லவாடு அருகே படகு என்ஜின் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2023-09-09 21:38 IST

அரியாங்குப்பம்

புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான பிள்ளைசாவடி பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 37). இவர் கடந்த 10 ஆண்டுகளாக தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு பகுதியில் தங்கியிருந்து படகு என்ஜின் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டார்.

சம்பவத்தன்று இவர், நல்லவாடு சமுதாய நலக்கூடம் அருகே படகு என்ஜின் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சுகேந்திரன், கணேசனிடம் தகராறு செய்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்