பா.ஜ.க. சார்பில் தேசிய கொடி வழங்கும் விழா

லாஸ்பேட்டை தொகுதியில் பா.ஜ.க. சார்பில் தேசிய கொடி வழங்கும் விழா நடந்தது.;

Update:2023-08-12 22:23 IST

புதுச்சேரி

நாட்டின் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவரது வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார். அவரது உத்தரவுக்கு ஏற்ப, புதுவை மாநிலம் லாஸ்பேட்டை தொகுதியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் (செவ்வாய்க்கிழமை) வரை 3 நாட்கள் தேசிய கொடியை ஏற்ற புதுச்சேரி மாநில பா.ஜ.க. தலைமை அறிவித்திருந்தது. அதன்படி, லாஸ்பேட்டை தொகுதி பொதுமக்களுக்கு செல்வகணபதி எம்.பி. தனது வீட்டில் நடந்த நிகழ்ச்சியில், இலவசமாக தேசிய கொடிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் லாஸ்பேட்டை தொகுதி பா.ஜ.க. பிரமுகர்கள் ஜெயபிரகாஷ், மவுலிதேவன், சந்துரு, வேலு, கலியபெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்