தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆய்வு

காலாப்பட்டு கடற்கரை கிராமங்களில் கடல் அரிப்பால் சேதமடைந்த வீடுகளை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆய்வு செய்தனர்.;

Update:2023-07-12 23:02 IST

காலாப்பட்டு

புதுவை மாநிலம் கடற்கரை கிராமங்களான கனகசெட்டிகுளம், பெரிய காலாப்பட்டு, சின்ன காலாப்பட்டு, பிள்ளைச்சாவடி ஆகிய மீனவ கிராமங்களில் கடல் அரிப்பால் வீடுகள் சேதமடைந்துள்ளன.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு கடல் சீற்றம் ஏற்பட்டு ஊருக்குள் கடல் நீர் புகுந்தது. கடல் அரிப்பு மற்றும் சேதமான வீடுகளையும் கடற்கரை கிராமங்களையும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிவா, அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது தி.மு.க. நிர்வாகிகள், மீனவ கிராம பஞ்சாயத்தார் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்