மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற மர்மநபர்கள்

தவளக்குப்பம் அருகே மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update:2023-09-24 22:25 IST

அரியாங்குப்பம்

தவளக்குப்பம் அடுத்த கடலூர் மாவட்டம் செல்லஞ்சேரி மந்தைவெளி காலனியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 29). இவர் தவளக்குப்பம் அண்ணா நகரில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்து வருகிறார்.

சம்பவத்தன்று வேலைக்கு வந்த சதீஷ் தனது மோட்டார் சைக்கிளை பேக்கரி அருகில் நிறுத்தியிருந்தார். வேலை முடிந்து மாலையில் வீட்டுக்கு புறப்படுவதற்காக பேக்கரியில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது, அவரது விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அக்கம் பக்கம் தேடி பார்த்தும் மோட்டார் சைக்கிளை கண்டுபிடிக்க முடியவில்லை.

இது குறித்த புகாரின்பேரில் தவளக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, மர்ம நபர்கள் 2 பேர் பட்டப்பகலில் அந்த மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றது தெரியவந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்