தேசியக்கொடி ஏந்தி போலீசார் அணிவகுப்பு

சுதந்திர தினத்தையொட்டி தேசியக்கொடி ஏந்தி போலீசார் அணிவகுப்பு நடத்தினர். கடலோர காவல்படையினர் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் சென்றனர்.

Update: 2023-08-14 15:54 GMT

காரைக்கால்

சுதந்திர தினத்தையொட்டி தேசியக்கொடி ஏந்தி போலீசார் அணிவகுப்பு நடத்தினர். கடலோர காவல்படையினர் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் சென்றனர்.

தேசியக்கொடி ஏந்தி அணிவகுப்பு

நாடெங்கும் இன்று சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணிஷ் தலைமையில், 200-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று கையில் தேசியக் கொடிகளை ஏந்தியபடி, காரைக்கால் நகரின் முக்கிய வீதிகள் வழியாக அணிவகுப்பு நடத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டுகள் சுப்பிரமணியன், நிதின் கவுஹால் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த அணி வகுப்பு ஊர்வலம் கலெக்டர் அலுவலக முன்பு தொடங்கி முக்கிய வீதியில் வழியாக சென்று, மீண்டும் கலெக்டர் அலுவலகத்தில் முடிவடைந்தது.

மோட்டார் சைக்கிள் ஊர்வலம்

இதேபோல் காரைக்காலில் உள்ள இந்திய கடலோர காவல்படை சார்பில் தேசியக்கொடி ஏந்தி மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடந்தது. காரைக்கால் கமாண்டிங் அதிகாரி விஜய் விஸ்வநாதன் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதில் 70-க்கும் மேற்பட்ட கடலோர காவல் படையினர் கலந்துகொண்டனர். நிரவியில் உள்ள இந்திய கடலோர காவல்படை தலைமை அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் காரைக்கால் கடற்கரை சாலையில் நிறைவு பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்