ஆதரவு கேட்டு அ.தி.மு.க.வினர் நோட்டீஸ்
புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி முழு அடைப்பு போராட்டத்திற்கு அ.தி.மு.க.வினர் ஆதரவு திரட்டினர்.;
அரியாங்குப்பம்
புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி அ.தி.மு.க. சார்பில், இன்று (புதன் கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. மாநில செயலாளர் அன்பழகன் உத்தரவின் பேரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அ.தி.மு.கவினர் நேற்று ஆதரவு திரட்டினர்.
அதன்படி மணவெளி தொகுதியில் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு மாநில துணைச் செயலாளர் குமுதன் புருஷோத்தமன் தலைமையில் நிர்வாகிகள் தவளக்குப்பம் வியாபாரிகள் சங்கத் தலைவர் ராமு விடம் ஆதரவு கேட்டு நோட்டீஸ் வழங்கினர். தொடர்ந்து பூரணாங்குப்பம், நோணாங்குப்பம், அபிஷேகப்பாக்கம், டி.என்.பாளையம், நல்லவாடு, சின்ன வீராம்பட்டினம் ஆகிய பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று நோட்டீஸ் வினியோகம் செய்தனர். முழு அமைப்பு போராட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டனர். இதில் மணவெளி தொகுதி அவைத்தலைவர் பி.ஆர்.மூர்த்தி, மாநில நிர்வாகிகள் நடராஜன், பார்த்த சாரதி, முனுசாமி, தீனதயாளன், தட்சணாமூர்த்தி, அய்யப்பன், ஜானகி, கார்த்தி, சிவசங்கரன், பலராமன், காத்தவராயன், சோமு, இளங்கோவன், வீரமணி, விஜயகுமார், காந்தாரி, கலியபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.