28 ஒப்பந்த பணியிடங்களுக்கு அறிவிப்பு

புதுவை மகளிர் மேம்பாட்டுத் துறையில் 28 ஒப்பந்த பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Update: 2023-08-10 18:06 GMT

புதுச்சேரி

புதுவை அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையில் மத்திய அரசின் திட்டமான மிஷன் சக்தி திட்டத்தின் கீழ் ஒன் ஸ்டாப் சென்டர் அமைக்க பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மைய நிர்வாகி, சட்ட, மருத்துவ பணியாளர், ஆலோசகர், அலுவலக உதவியாளர் உள்பட 28 பணியிடங்கள் ஒரு வருடத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான தகுதி, விதிமுறைகள் குறித்து துறையின் இணையதளமான https://wcd.puducherry.gov.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம். மேற்கண்ட தகவலை இயக்குனர் முத்துமீனா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்