பொதுஇடத்தில் ரகளை; வாலிபர் கைது

புதுவை அருகே பொதுஇடத்தில் ரகளை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-07-21 22:05 IST

மூலக்குளம்

மேட்டுப்பாளையம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் குண்டு சாலையில் நீர்த்தேக்க தொட்டி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு முத்தியால்பேட்டை செங்கேணி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த இளங்கோ (வயது 33) என்பவர் பொதுமக்களுக்கு இடையூராக ரகளையில் ஈடுபட்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்