'கேப்டன் எங்களின் சொத்தல்ல, மக்களின் சொத்து' - பிரேமலதா விஜயகாந்த்

திரைப்படங்களில் கேப்டனின் பாடலை, போஸ்டர்களைப் பயன்படுத்தினால் காப்புரிமையெல்லாம் கேட்க மாட்டோம் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.;

Update:2024-09-28 12:53 IST
Captain is not our property, peoples property  - Premalatha Vijayakanth

சென்னை,

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டக்கத்தி தினேஷ், சஞ்சனா, பால சரவணன், டி.எஸ்.கே, ஜென்சன், தேவதர்ஷினி, காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் திரையரங்குகளில் கடந்த 20-ம் தேதி வெளியான படம் 'லப்பர் பந்து'. சஞ்சனா, சுவாசிகா கதாநாயகிகளாக நடித்துள்ள இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தில், கெத்து கதாபாத்திரத்தில் வரும் அட்டக்கத்தி தினேஷ், தீவிர விஜயகாந்த் ரசிகராக நடித்திருக்கிறார். அவருக்கான பில்டப் பாடலாக நடிகர் விஜயகாந்த் நடித்த பொன்மனச்செல்வன் படத்தின் 'நீ பொட்டு வச்ச தங்கக் குடம் ஊருக்கு நீ மகுடம்' என்ற பாடல் ஒலிக்கிறது. இந்தப் பாடல் ஒலிக்கும்போது ரசிகர்களின் ஆரவாரத்தால் திரையரங்கமே அதிர்கிறது. இதுதான் விஜயகாந்த்துக்கு உண்மையான அஞ்சலி எனப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதையடுத்து சமூகவலைதளமெங்கும் இப்பாடலும், இப்படம் தொடர்பான காணொலிகளும் வைரலாகி ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன் ஆகியோர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில்,

'திரைப்படங்களில் கேப்டனின் பாடலை, போஸ்டர்களைப் பயன்படுத்தினால் காப்புரிமையெல்லாம் யாரிடமும் கேட்க மாட்டோம். கேப்டன் எங்களின் சொத்தல்ல, மக்களின் சொத்து,' என்றார். முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான 'தி கோட்' படத்தில் விஜயகாந்த்தின் ஏ.ஐ தோற்றம் பயன்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்