தமிழகத்தில் 59 சதவீதம் எஸ்.ஐ.ஆர் படிவங்கள் ஆன்லைனில் பதிவேற்றம்
எஸ்.ஐ.ஆர் பணியை அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ந் தேதியுடன் நிறைவு செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.;
சென்னை,
பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி கடந்த 4-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியில் அரசியல் கட்சியினரும் தீவிரம் காட்டி வருகிறார்கள். வீடு வீடாக படிவங்கள் கொடுக்கப்பட்டு அதில் வாக்காளர்கள் தங்களது புகைப்படத்தை ஒட்டி அலுவலர்களிடம் ஒப்படைத்து வருகிறார்கள். அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ந் தேதியுடன் இந்தப்பணியை நிறைவு செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது. இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
இந்தநிலையில்,
* தமிழகத்தில் 6.19 கோடி வாக்காளர்களின் எஸ்.ஐ.ஆர். படிவங்கள் 96.85 சதவீதம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
* தமிழகத்தில் 3.78 கோடி வாக்காளர்களின் எஸ்.ஐ.ஆர் படிவங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
* லட்சத்தீவில் 99.33 சதவீதம், கோவாவில் 82.67 சதவீதம் வாக்காளர்களின் படிவங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
* எஸ்.ஐ.ஆர் பணிகள் நடக்கும் 12 மாநிலங்களில் மொத்தமாக 56.34 சதவீத பேரின் படிவங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
என தேர்தல் கமிஷன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.