உதகையில் அனைத்து சுற்றுலா தலங்களும் இன்று ஒருநாள் மூடல்

கோவை, நீலகிரி மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது .;

Update:2025-05-27 11:11 IST

நீலகிரி,

கோவை , நீலகிரி மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தீவிரப்படுத்தின. கோவை, நீலகிரி மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது .

இந்த நிலையில் கனமழை காரணமாக உதகையில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் இன்று ஒருநாள் மூடப்படுகிறது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, உதகை, பைக்காரா படகு இல்லம் என அனைத்து சுற்றுலா தலங்களும் மூடல். தொட்டபெட்டா காட்சி முனை, பைன் பாரஸ்ட், சூட்டிங் மட்டம், பைக்காரா நீர்வீழ்ச்சி மூடல். அவலாஞ்சி சூழல் சுற்றுலா மையம், டால்பின் நோஸ், லேம்ஸ் ராக் சுற்றுலா தலங்களும் மூடப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்