தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உதவி
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியில் இருந்து துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.;
சென்னை,
தமிழக வில்வித்தை வீராங்கனை கே.எஸ்.வெனிசா ஸ்ரீக்கு, வில்வித்தை பயிற்சிக்கு தேவையான உபகரணத்தை ரூ.4.10 லட்சம் செலவில் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியில் இருந்து துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “வில் வித்தை வீராங்கனை தங்கை கே.எஸ்.வெனிசா ஸ்ரீ சர்வதேச அளவில் பதக்கங்களைக் குவித்து தமிழ்நாட்டுக்குப் பெருமைத் தேடித்தந்து வருகிறார்.
அவரின் வில் வித்தை பயிற்சிக்குத் தேவையான உபகரணத்தை ரூ.4.10 லட்சம் செலவில் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியில் இருந்து இன்று (நேற்று) வழங்கினோம். தங்கை
வெனிஷா ஸ்ரீயின் சாதனைகள் தொடர என் அன்பும், வாழ்த்தும்!” என்று பதிவிட்டுள்ளார்.