சதுரகிரி கோவிலுக்கு இன்று பக்தர்கள் செல்ல தடை

மலைப்பகுதியில் பெய்யும் தொடர் மழையால் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.;

Update:2026-01-11 11:03 IST

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் சென்று வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மழை பாதிப்பு அல்லாத சாதாரண நாட்களிலும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

இந்த நிலையில், வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மலைப்பகுதியில் பெய்யும் தொடர் மழையால் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்பு கருதி சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இன்று விடுமுறை தினம் என்பதால், பல பக்தர்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்வதற்கான வருகை தந்திருந்தனர். ஆனால், வனத்துறையினர் தடை காரணமாக அவர்கள் ஏமாற்றமடைந்தனர்.  

Tags:    

மேலும் செய்திகள்