‘நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை’ - சவுமியா அன்புமணி
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீட்டை அரசு வழங்கவில்லை என சவுமியா அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.;
சென்னை,
பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி கும்பகோணத்தில் நடந்த சிங்க பெண்ணே நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவரை திரளான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அவர்களுடன் சவுமியா அன்புமணி கலந்துரையாடினார். பின்னர் அவர்கள் மத்தியில் சவுமியா அன்புமணி பேசியதாவது:-
“கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அடிப்படை கட்டமைப்புகள் முறையாக இல்லை. எம். ஆர். ஐ. ஸ்கேன் வசதி இல்லை. போதிய டாக்டர்கள் இல்லை. நர்சுகள் இல்லை. எனவே கும்பகோணத்தை மாவட்ட தலைநகரமாக தரம் உயர்த்தி மருத்துவக் கல்லூரியை அமைக்க வேண்டும்.
டாஸ்மாக் கடைகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொடுக்கப்படவில்லை. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேவையான கிடங்கு வசதிகள் செய்ய வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீட்டை அரசு வழங்கவில்லை.”
இவ்வாறு அவர் பேசினார்.