பேருந்து ஏற காத்திருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை - வடமாநில வாலிபர் கைது

கீழ்ப்பாக்கத்தில் பேருந்து ஏற காத்திருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update:2026-01-07 15:32 IST

கோப்புப்படம் 

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் புரமோத் யாதவ் (35 வயது). இவர் சென்னை எழும்பூரில் உள்ள இனிப்புக்கடை ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் கீழ்ப்பாக்கம் பர்னபி சாலையில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்க்கும் பெண் ஒருவர், அந்த பகுதியில் பேருந்து ஏற காத்திருந்தார். அப்போது அங்கு சென்ற புரமோத் யாதவ், அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

அந்த பெண் கூச்சல் போடவே, அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சி.சி.டி.வி. பதிவுகளின் அடிப்படையில் புரமோத் யாதவ் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற காவலில் அவர் சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்