டாக்டர் கே.எம்.செரியன் மறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

இந்தியாவில் முதல் இதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்த டாக்டர் கே.எம்.செரியன், உடல்நலக்குறைவால் காலமானார்.;

Update:2025-01-26 16:56 IST

சென்னை

மூளைச்சாவு அடைந்த நோயாளியிடமிருந்து இதயத்தை எடுத்து அதனை மற்றொரு நபருக்கு பொருத்தி வெற்றிகரமாக இந்தியாவில் முதல் இதய மாற்று அறுவைச் சிகிக்சையை செய்து காட்டிய மருத்துவர் கே. எம். செரியன். கேரளாவை சேர்ந்த இவர், வயது முதிர்வின் காரணமாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவில் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், டாக்டர் கே.எம்.செரியன் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்;

பிரான்டியர் லைப்லைன் மருத்துவமனையின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியும், இதய அறுவை சிகிச்சையில் உலகளவில் புகழ்பெற்றவருமான டாக்டர் கே.எம்.செரியனின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இதய அறுவை சிகிச்சையில் அவரது முன்னோடிப் பணி எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றியது மற்றும் மருத்துவத் துறையில் பலருக்கு உத்வேகம் அளித்தது.

அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். மருத்துவத்துறையில் அவரது பங்களிப்புகள் மருத்துவத்தில் சிறந்து விளங்க தொடர்ந்து ஊக்கமளிக்கும்." என பதிவிட்டுள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்