வேலூர் மத்திய சிறைக்குள் விழுந்த டிரோனால் பரபரப்பு
சிறைக்கு மேல் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.;
வேலூர்,
வேலூர் தொரப்பாடியில் மத்திய ஆண்கள் சிறை அமைந்துள்ளது. இங்கு தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் 700-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைக்கு மேல் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிறைக்கு மேலே மர்மநபர்கள் டிரோனை நேற்று காலை பறக்க விட்டுள்ளனர். அப்போது திடீரென அந்த டிரோன் சிறை வளாகத்தில் உள்ள ஒரு கண்காணிப்பு கோபுரத்தின் கீழ் விழுந்தது.
அப்போது அங்கு பணியில் இருந்த 2-ம்நிலை காவலர் பரத் அந்த டிரோனை எடுத்து சிறை அலுவலர் சிவபெருமாளிடம் ஒப்படைத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.