கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவு - திருமாவளவன் இரங்கல்
தமிழன்பனை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய ஆவன செய்ய வேண்டுகிறேன் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;
கவிஞர் ஈரோடு தமிழன்பனின் மறைவு மிகுந்த துயரமளிக்கிறது.
முற்போக்கு சிந்தனையாளர். சமூகநீதிப் பார்வை கொண்ட தமிழ்ப் போராளி. சமத்துவம் இம்மண்ணில் மலர வேண்டுமென்கிற வேட்கை கொண்ட வேங்கை. வயது மூப்பிலும் கொள்கைக் களம் மாறா வரிப்புலி. அவருக்கு எமது வீரவணக்கம்.
திராவிடக் கருத்தியலின் காவலரணாக கவிப்புலத்தில் பெரும்பங்காற்றிய பெருங்கவி ஈரோடு தமிழன்பனை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய ஆவன செய்ய வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.