கரூர்: விஷபூச்சி கடித்து முதியவர் சாவு

தென்னை மரத்தில் ஏறி தேங்காய்களை வெட்டியுள்ளார். அப்போது அதில் இருந்த விஷபூச்சி ஒன்று அவரை கடித்துள்ளது.;

Update:2025-04-20 04:02 IST

கரூர்,

கரூர் அருகே உள்ள கூனம்பட்டியை சேர்ந்தவர் கருப்பண்ணன் (வயது 62). மரம் ஏறும் தொழிலாளி. இவர் கடந்த 16-ந்தேதி தொட்டம்பட்டியில் உள்ள ஒரு தோட்டத்தில் தென்னை மரத்தில் ஏறி தேங்காய்களை வெட்டியுள்ளார்.

அப்போது அதில் இருந்த விஷபூச்சி ஒன்று கருப்பண்ணனை கடித்துள்ளது. இதனால் வலி தாங்க முடியாமல் தவித்த அவர் தென்னிலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் கருப்பண்ணன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தென்னிலை போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்