கருணை அடிப்படையிலான அரசு பணிக்கு ‘ஆன்லைன்’ மூலம் மட்டும் விண்ணப்பம்; அரசாணை வெளியீடு
இந்த வலைதளம் கடந்த 31-ந் தேதியில் இருந்து செயல்பாட்டுக்கு வந்துள்ளது.;
சென்னை,
பணியின் போது உயிரிழந்த அரசு பணியாளர்களின் சட்டப்பூர்வ வாரிசுதாரர்கள் கருணை அடிப்படையிலான பணிக்கு ‘ஆன்லைன்’ மூலம் மட்டுமே விண்ணப்பிக்கும் வகையில் தமிழ்நாடு குடிமைப்பணிகள்(கருணை அடிப்படையிலான பணி நியமனம்)விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, பணியின் போது உயிரிழந்த அரசு பணியாளர்களின் சட்டப்பூர்வ வாரிசுதாரர்கள் கருணை பணி கோரி விண்ணப்பிக்க www.tncgpa.tn.gov.in என்ற புதிய வலைதளத்தை உருவாக்கி தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் அரசாணை வெளியிட்டுள்ளார்.
இந்த வலைதளம் கடந்த 31-ந் தேதியில் இருந்து செயல்பாட்டுக்கு வந்துள்ளது என்றும், இனிமேல் கருணை அடிப்படையிலான பணி கோருபவர்கள் இந்த வலைதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.