மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் நாளை மின்தடை
தூத்துக்குடி அய்யனார்புரம் துணைமின் நிலையத்தில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.;
தூத்துக்குடி மின்பகிர்மான வட்டம், அய்யனார்புரம் துணைமின் நிலையத்தில் நாளை (6.11.2025, வியாழன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் மாப்பிள்ளையூரணி, ஜோதிநகர், திரேஷ்நகர், ஹைசிங்போர்டு, குமரன்நகர், காமராஜ்நகர், டேவிஸ்புரம் சாகிர்உசேன்நகர், சுனாமிநகர் நேரு காலனி கிழக்கு, ஜீவாநகர், லூர்தம்மாள்புரம், தாளமுத்துநகர், கோயில்பிள்ளைவிளை, ஆரோக்கியபுரம் T.சவேரியார்புரம், மாதாநகர், ராஜாபாளையம், சிலுவைபட்டி, கிருஷ்ணராஜாபுரம்,
முத்துகிருஷ்ணாபுரம், மேலஅரசடி, கீழஅரசடி, வெள்ளப்பட்டி, தருவைகுளம் பனையூர், தளவாய்புரம், கோமஸ்புரம், பட்டிணமருதூர், உப்பளபகுதிகள், பனையூர், ஆனந்தமாடன்பச்சேரி, வாலசமுத்திரம், மேலமருதூர், அ.குமாரபுரம், மேலமருதூர், திரேஸ்புரம், மேலஅலங்காரதட்டு, மாணிக்கப்புரம், பூபாலராயர்புரம், குருஸ்புரம், சங்குகுளி காலனி, மேட்டுப்பட்டி, முத்தையார் காலனி, வெற்றிவேல்புரம், ராமர்விளை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.