நீலகிரியில் கனமழை: உதகை மலை ரெயில் சேவை ரத்து

உதகைக்கு இன்று காலை புறப்பட்ட ரெயில், மண் சரிவு காரணமாக பாதியிலேயே ரத்து செய்யப்பட்டு திரும்பியது.;

Update:2026-01-02 10:44 IST

நீலகிரி,

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் இரவு முழுவதும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அடர்லி மற்றும் ஷில்குரோவ் ரெயில் நிலையங்களுக்கு இடையேயான மலை ரெயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று காலை உதகைக்கு புறப்பட்ட ரெயில், மண் சரிவு காரணமாக பாதியிலேயே ரத்து செய்யப்பட்டு திரும்பியது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர். தண்டவாளத்தில் விழுந்துள்ள மணல் மற்றும் கற்களை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.  

Tags:    

மேலும் செய்திகள்