தாராபுரத்தில் ஐகோர்ட் வழக்கறிஞர் வெட்டிக் கொலை

சம்பவ இடத்தில் தாராபுரம் டி.எஸ்.பி. சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.;

Update:2025-07-28 22:03 IST

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சென்னை ஐகோர்ட்டு வழக்கறிஞரை வெட்டிக்கொலை செய்து விட்டு மர்ம நபர்கள் தப்பியோடினர். வழக்கறிஞர் முருகானந்தத்தை(35) கொலை செய்து விட்டு தப்பிய மர்ம நபர்கள் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவ இடத்தில் தாராபுரம் டி.எஸ்.பி. சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். முன்பகை காரணமாக கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்