பெண்கள் விரும்பும் தலைவியாக திகழ்ந்தவர் ஜெயலலிதா : தமிழிசை சவுந்தரராஜன்

பெண்கள் விரும்பும் தலைவியாக திகழ்ந்தவர் ஜெயலலிதா என்று தமிழிசை சவுந்தரராஜன் புகழாரம் சூட்டி உள்ளார்.;

Update:2025-02-24 11:40 IST

FILEPIC

சென்னை,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், மக்கள் என பலரும் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-

இரும்பு பெண்ணாக நின்று.. கடுமையான அரசியல் சூழ்நிலைகளை.. துரும்பு என்று சமாளித்து... கடுமையாகத் தெரிந்தாலும்.. மனதில் கரும்பு என்று... நிரூபித்து... கட்சி எல்லை கடந்து.. பெண்கள் விரும்பும் தலைவியாக.. வலம் வந்த... மரியாதைக்குரிய.. முன்னாள் முதலமைச்சர் அம்மா ஜெயலலிதா அவர்களை அவர் பிறந்த நாளில் நினைவு கூறுகிறேன் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்