கமலின் குரல் மாநிலங்களவையில் ஓங்கி ஒலிக்கும் - உதயநிதி ஸ்டாலின்

இந்திய அரசியலமைப்பை பாதுகாக்க கமல் சாரின் குரல் மாநிலங்களைவையில் ஓங்கி ஒலிக்கப்போவதை எண்ணி மகிழ்கிறோம் என உதயநிதி ஸ்டாலின்தெரிவித்துள்ளார்.;

Update:2025-05-28 14:11 IST

சென்னை,

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

கழக அணி சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கலைஞானி கமல்ஹாசன் சாருக்கு என் அன்பு வாழ்த்துகள்.

இத்தேர்தலில் வென்று, தமிழ்நாட்டின் உரிமைக்காகவும், இந்திய அரசியலமைப்பை - பன்முகத்தன்மையை பாதுகாக்கவும், கமல் சாரின் குரல் மாநிலங்களைவையில் ஓங்கி ஒலிக்கப்போவதை எண்ணி மகிழ்கிறோம்.என தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்