கும்பகோணம்: குடமுழுக்கு விழாவில் கூட்ட நெரிசல் - 6 பேர் மயக்கமடைந்ததால் பரபரப்பு

மயக்கமடைந்த பக்தர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.;

Update:2025-12-01 14:17 IST

தஞ்சாவூர்,

கும்பகோணத்தில் உலக பிரசித்தி பெற்ற ஆதி கும்பேஸ்வரர் கோவில் உள்ளது. கும்பகோணம் மகாமகத் திருவிழா தொடர்புடைய 12 சைவ திருத்தலங்களில் முதன்மையான இத்தலத்தில் ஸ்ரீ மங்களாம்பிகா சமேத ஸ்ரீ ஆதிகும்பேஸ்வரர் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில், கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் 5-ந்தேதி குடமுழுக்கு விழா நடந்தது.

தொடர்ந்து வரும் 2028-ம் ஆண்டில் மகாமக விழா நடைபெற உள்ள சூழலில், கோவில் குடமுழுக்கு விழாவை நடத்த பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து குடமுழுக்கு செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் 23-ந்தேதி பாலாலயம் செய்யப்பட்டு, திருப்பணிகள் நடந்து வந்தன.

பணிகள் நிறைவடைந்து இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் 6 பேர் மயக்கமடைந்தனர். இதையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, மயக்கமடைந்த பக்தர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். குடமுழுக்கு விழாவில் பக்தர்கள் மயக்கமடைந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Full View
Tags:    

மேலும் செய்திகள்