நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் புகழைப் போற்றுவோம்: ஆதவ் அர்ஜுனா
'இந்தியத் தேசிய ராணுவம்' என்ற மக்கள் படையைக் கட்டமைத்து, ஆதிக்க படையை அச்சுறுத்தியவர் சுபாஷ் சந்திர போஸ் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்;
சென்னை,
தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காக செல்வ செழிப்பான வாழ்க்கையையும் விரும்பி தேர்ந்தெடுத்த ஐசிஎஸ் பதவியையும் தூக்கி எறிந்துவிட்டு, மக்கள் அரசியலில் பங்கேற்றவர். இந்தியத் தேசிய இயக்கத்தில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு, காங்கிரஸ் கட்சியின் தலைவராக உயர்ந்தவர். பிறகு, 'இந்தியத் தேசிய ராணுவம்' என்ற மக்கள் படையைக் கட்டமைத்து, ஆதிக்க படையை அச்சுறுத்தியவர்.
வீரமான நிர்வாகக் கட்டமைப்பு, விவேகமான அரசியல் சிந்தனை, முன்னுதாரணமான சமத்துவ எண்ணங்கள், அனைவருக்குமான மதச்சார்பற்ற ஈடுபாடு மற்றும் சோசலிச கனவு ஆகியவற்றை வலியுறுத்தி மக்கள் போற்றும் 'மரியாதைக்குரிய தலைவராக' இருந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாளான இன்று, அவர் புகழைப் போற்றுவோம்.என தெரிவித்துள்ளார்.