பிரதமர் மோடியின் சென்னை வருகை தாமதம்
பிரதமர் மோடி சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுராந்தகம் வர உள்ளார்.;
சென்னை,
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 23-ந்தேதி(இன்று) நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று கலந்து கொள்ள உள்ளார். முன்னதாக இன்று பிரதமர் நரேந்திர மோடி கேரளாவுக்கு சென்றார்.
அங்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அவர், 3 அம்ரித் பாரத் ரெயில்கள் உள்பட 4 புதிய ரெயில்களின் சேவைகளை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து கேரளாவில் இருந்து புறப்பட்டு சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்.
பிரதமர் மோடி 2.15 மணிக்கு சென்னைக்கு வருவார் என திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், பிரதமர் மோடியின் சென்னை வருகை தாமதமாகி உள்ளது. இன்னும் சற்று நேரத்தில் சென்னைக்கு வந்து சேரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு மதுராந்தகம் வர உள்ளார்.