ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி நிறுவனம் தொடுத்த வழக்கு...கோர்ட்டு அதிரடி உத்தரவு

ரங்கராஜ் மீது புகார் அளித்த ஜாய் கிரிசில்டா மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை டேக் செய்து எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருந்தார்.;

Update:2025-11-25 11:35 IST

சென்னை,

மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரத்தில் தங்கள் நிறுவனத்தை தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவிட, ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரி மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக ரங்கராஜ் மீது புகார் அளித்த ஜாய் கிரிசில்டா மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை டேக் செய்து எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருந்தார்.

இதற்கிடையில், ஜாய் கிரிசில்டா வெளியிட்ட புகார் மற்றும் சமூக வலைதள பதிவுகளால் தங்களது நிறுவனத்திற்கு பாதிப்பு ஏற்பட்டதாக மாதம்பட்டி ரங்கராஜின் தந்தை நடத்தி வரும் மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் குற்றச்சாட்டு முன்வைத்தது. ஜாய் கிரிசில்டா பதிவால் ரூ.12 கோடி வர்த்தக இழப்பு ஏற்பட்டதாக மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடுத்தது.

மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிட, ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரி மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிட்டாலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி செந்தில்குமார் , ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்