தனுஷ்கோடி கடலுக்கு நடுவில் புதிய மணல் திட்டு: ஆபத்தை உணராமல் செல்லும் சுற்றுலா பயணிகள்.!

தனுஷ்கோடியில் கடல் நீரோட்ட மாற்றத்தால் 2 இடங்களில் புதிதாக மணல் திட்டுகள் உருவாகி உள்ளன.;

Update:2025-12-15 17:34 IST


ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள தனுஷ்கோடி அரிச்சல் முனையானது, 2 கடல்கள் சங்கமிக்கும் இடமாகும். இதில் தென்கடல் பகுதியில் கடல் நீரோட்ட மாற்றத்தால் 2 இடங்களில் புதிதாக மணல் திட்டுகள் உருவாகி உள்ளன.

அரிச்சல்முனை சாலை வளைவில் நின்று பார்த்தாலே கண்ணுக்கு எட்டிய தூரத்தில் கடலின் நடுவே அந்த மணல் திட்டுகள் தெளிவாக தெரிகின்றன. இந்த மணல் திட்டுகளை சாலையில் நின்றபடி சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து மகிழ்ந்து வருகின்றனர்.

ஆனால் சில சுற்றுலா பயணிகள் கடலுக்கு நடுவில் அமைந்துள்ள மணல் திட்டு பகுதிக்கு தடையை மீறி ஆபத்தை உணராமல் செல்கின்றனர். அவர்கள் இடுப்பளவு கடல் நீரில் இறங்கி சென்று புதிய மனல் திட்டு அமைந்துள்ள பகுதிக்கு சென்று செல்பி எடுத்து மகிழ்கின்றனர். இது ஆபத்தான செயல்முறை என்றும், அசாம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன்பு மாவட்ட காவல் துறை இதனை தடுத்து நிறுத்த வேன்றும் எனவும் உள்ளூர் மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்