கும்பகோணம்: நாட்டாற்றில் கலக்கும் கழிவுநீர் - 80 கிராமங்களின் குடிநீர் ஆதாரம் பாதிப்பு

ஆற்றங்கரை ஓரங்களில் ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டி அசுத்தப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.;

Update:2025-12-15 16:53 IST

தஞ்சாவூர்,

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் காவிரி ஆற்றின் கிளை நதியான அரசலாற்றில் இருந்து நாட்டாறு பிரிந்து, மயிலாடுதுறை மாவட்டத்தின் மாந்தை பகுதியில் மேலும் இரு கிளை நதிகளாக மாறி காரைக்கால் வரை சுமார் 70 கி.மீ. பயணம் செய்து கடலில் கலக்கிறது. இதன் மூலம் 28,000 விவசாய நிலங்கள் பயனடைந்து வருவதோடு, சுமார் 80 கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரம் கிடைக்கிறது.

இந்த நிலையில், கும்பகோணம் சாக்கோட்டை அருகே உள்ள நாட்டாற்றில், துணை வாய்க்காலில் இருந்து கழிவுநீர் அதிக அளவில் கலக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆற்றின் நீர் நிறம் மாறி, துர்நாற்றம் வீசுகிறது. மேலும், ஆற்றங்கரை ஓரங்கள் முழுவதும் ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டி அசுத்தப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும் ஊராட்சி நிர்வாகம் தொடர்ந்து குப்பைகளை கொட்டி வருவதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், ஆற்றின் நீர் மாசுபடுவதால் 80 கிராமங்களின் குடிநீர் ஆதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Full View
Tags:    

மேலும் செய்திகள்