மெட்ரோ ரெயில் நிலையங்களில் புதிய வணிக வளாகங்கள் - 3 ஆண்டுகளில் செயல்படுத்த திட்டம்

25 மெட்ரோ ரெயில் நிலையங்களில் 30 லட்சம் சதுர அடிக்கும் மேற்பட்ட அலுவலகம் மற்றும் வர்த்தக இடங்கள் உருவாக்கப்பட உள்ளன.;

Update:2025-11-19 21:12 IST

சென்னை,

சென்னையில் அடுத்த 3 ஆண்டுகளில் 25 மெட்ரோ ரெயில் நிலையங்களில் புதிய வணிக வளாகங்களை உருவாக்க சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தின் ஒரு பகுதியாக இதனை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, அடுத்த 3 ஆண்டுகளில் 25 மெட்ரோ ரெயில் நிலையங்களில் 30 லட்சம் சதுர அடிக்கும் மேற்பட்ட அலுவலகம் மற்றும் வர்த்தக இடங்கள் உருவாக்கப்பட உள்ளன. மெட்ரோ நிலையங்கள் பயண நிலையங்களாக மட்டும் இல்லாமல் அங்கு அலுவலக வளாகங்கள், சில்லறை அங்காடிகள், ஹைப்பர் மார்க்கெட்டுகள், உணவகங்கள், ஷாப்பிங் மால்கள், வணிக மையங்கள், பொழுதுபோக்கு தளங்கள் போன்ற வசதிகளைக் கொண்ட ஒருங்கிணைந்த சிறிய வணிக வளாகங்களாக மாற்றப்பட உள்ளதாக மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Advertising
Advertising

சென்னை சென்ட்ரல், திருமங்கலம், மந்தைவெளி, ஆயிரம் விளக்கும், பெருங்குடி, சோழிங்கநல்லூர், காரப்பாக்கம், துரைப்பாக்கம், செம்பியம், அயனாவரம், புரசைவாக்கம், பெரம்பூர், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, அடையாறு பணிமனை உள்ளிட்ட இடங்களில் சிறிய நடுத்தர வணிக வளாகங்கள் அமைக்கப்பட உள்ளன. 2028-ம் ஆண்டிற்குள் படிப்படியாக இந்த வணிக வளாகங்கள் திறக்கப்பட உள்ளதாக மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்